மாத்தறை பிரவுண்ஹில் பகுதியில் காணி கொள்வனவு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாத்தறை பிரவுண்ஸஹில் எலியகந்தை பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றன.இந்த காணி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமானது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஜேர்மனியை சேர்ந்த ஹேர்பெர்ட் ஹெல்லர் என்பவருக்கு சொந்தமான இந்த தென்னந்தோப்பு காணியை பசில்ராஜபக்ச 60 மில்லியன் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்த காணியை பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.