சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 29 வயது இளைஞனை மோசமாக தாக்கிய பொலிஸார் இருவரையும் கைதுசெய்யவேண்டும் என உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பில் அவர்கள் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
தனது கணவரின் மரணத்திற்காக நீதி கோருவதாக தெரிவித்துள்ள 29 வயது இளைஞனின் மனைவி சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக உடனடி சட்டநடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் எனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக நீதி கேட்க பொலிஸ்தலைமையகத்திற்கு வந்தோம் அவர்மீது தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்தவர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளனர் ஆனால் கைதுசெய்யவில்லை என சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 29 வயது இளைஞனின் மனைவி தெரிவித்தார்.
கடுமையாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களே உயிரிப்புக்கு காரணம் என சட்டமருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர்கழுத்தில் எலும்பு உடைந்துள்ளது தலையில்இரத்தக்கசிவு காணப்படுகின்றது மூளையில் வீக்கம் காணப்படுகின்றது என சட்டமருத்துவ அதிகாரி தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்பு இடம்பெற்று 48 மணித்தியாலகளுக்கு மேல் கடந்துவிட்டது இதற்கு காரணமான பொலிஸார் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை,உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் மிரிஹான பொலிஸ் நிலையபொலிஸார் உறவினர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர் ஆனால் இதுவரை எவரையும் கைதுசெய்யாதமைக்கான உரிய காரணங்களை முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.