காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி மீனவர்களை தேடிச் செல்லவுள்ள அணியினருக்கான பாதுகாப்பு சட்டைகளை (safety jacket) பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டார்
நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என, முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல்போன மீனவர்களது உறவினர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 28.10.2026இன்று ஆறுதல் கூறியுள்ளார்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடி 29.10.2026 நாளையதினம் காணாமல் போன மீனவர்களைத் தேடிச்செல்லும் மீனவர் அணியினருக்காக பாதுகாப்புச் சட்டைகளையும் (safety jacket) பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேற்கொண்டார்.
மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
காணாமல்போயிருக்கின்ற மூன்றுபேரையும் தேடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எம்மால் கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட தரப்பினரிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட தரப்பினர் காணமல்போன மூன்று பேரையும் தேடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக அறிகின்றோம்.
அத்தோடு மாத்தளன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் எட்டுப்படகுகள் 70கிலோமீற்றர்வரையில் கடலுக்குள் சென்று தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
என்னைப்பொறுத்தவரை அவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் மூவரும் திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலுடன் 29.10.2026நாளைய தினமும் கடற்றொழிலாளர் சங்கத்தினரும், இளைஞர்களும் தேடுதல் பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றனர்.
எனவே மூவரையும் பறிகொடுத்துவிட்டோமென நினைத்து உறவுகள் கவலைகொள்ளவேண்டாம். மூவரும் இருக்கின்றார்கள் என நினைத்துக்கொள்ளுங்கள்.
May be an image of one or more people and beach
உறவுகள் மூவரும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையுடனேயே மீண்டும் 29ஆம்திகதி நாளையதினம் இந்த இளைஞர்கள் தேடிச் செல்லவுள்ளனர்.
ஆகவே நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது காணாமல் போன மீனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடி 29.10.2026 நாளையதினம் காணாமல் போன மீனவர்களைத் தேடிச்செல்லும் மீனவர் அணியினருக்காக பாதுகாப்புச் சட்டைகளையும் (safety jacket) பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

chemmani145
ஈழத் தமிழர்களின் மரணங்கள் குறித்து முடிவுகளை எடுக்கராஜ் சோமதேவா தகுதியற்றவர்-ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு
ali sab
நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துகள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கேள்வி
anadapuram
ஆனந்தபுரச்சமர்- இலங்கைப்போர் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதி-சர்வதேச அமைப்புஅறிக்கை
spain train1
ஸ்பெயினில் நடந்த ரயில்விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழப்பு - அதிகாரிகள் அறிவிப்பு
arrest1
ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது: காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்
humanright comm
ஹோமாகம சந்தேகநபரின் மரணம்: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
Screenshot_20261028_121110_Editor-Lite
ஹோமாகம பொலிஸ் நிலைய உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட பொலிஸாரை இன்னமும் கைதுசெய்யாதது குறித்து குடும்பத்தவர்கள் கடும் சீற்றம்
namal courts
பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் - நீதிமன்றத்தில் அலி சப்ரி
Gotabaya Rajapakasa
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கை: நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு CIDக்கு உத்தரவு
batti mayi
மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்