ஆனந்தபுரச்சமர்- இலங்கைப்போர் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதி-சர்வதேச அமைப்புஅறிக்கை
2009ம் ஆண்டு ஆனந்தபுரம் சமர் குறித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளதாவது

2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போரின்முடிவுப் பகுதியானது அரசாங்கப் படைகளுக்கும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இடையிலான பல தசாப்தகால போரில் மிகவும் மோசமான
காலப் பகுதியாகப் பரவலாக அறியப்படுகின்றது. இந்தக்காலப் பகுதியே ஐக்கிய நாடுகள் மற்றும் இலங்கைதவிர்ந்த பல நாடுகளிலும் உள்ள வழக்கறிஞர்களின்பல ஆண்டுகால விசாரணைக்குரிய விடயமாக உள்ளது.இலங்கையிலே மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும்
போர்க்குற்றங்கள் தொடர்பாக மறுப்பு இருந்து வருகின்றது.இன்றுவரை அந்த இறுதி ஐந்து மாதங்களிலும் எவ்வளவுஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள் என எவருக்குமே
தெரியாது. அத்துடன் பல வருடங்கள் கடந்த பின்னரும்எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவும் இல்லைஅத்துடன் புரியப்பட்ட கொடூரங்களுக்கு அவர்களின்
வகிபாகத்திற்காக எவருக்கும் தண்டனை வழங்கப்படவும்இல்லை.என தெரிவித்துள்ளது.
ஏப்பிரல் 2009 இல் இரண்டு ஆயுதப்படையினருக்கும்இடையில் இறுதிப் பாரிய சமர் ஆனந்தபுரத்தில் இடம்பெற்றது.ஆய்வுக்குரிய ஒரு விடயமான ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற
சம்பவங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்உட்பட அனைவராலுமே இன்றுவரைபுறக்கணிக்கப்பட்டிருந்தது. ஆயுதக் குழுக்களுக்குஇடையிலான மோதல்களை விட பொதுமக்கள்உணவு வரிசைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீதானதாக்குதல்கள் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இதனைவிட நடந்த சம்பவங்கள் பற்றி சாட்சி கூறுவதற்குஆனந்தபுரம் சமரில் மிகச் சிறிய எண்ணிக்கையான தமிழீழ விடுதலைப் புலிகள்போராளிகளே உயிர் தப்பியிருந்ததாக நம்பப்பட்டது.
இருப்பினும் கடந்த 17 ஆண்டு காலப் பகுதியில்உயிர்தப்பியவர்கள் வெளிநாடுகளில் மெது மெதுவாகதலைகாட்டத் தொடங்கினார்கள். இலங்கையிலும்உயிர்தப்பியவர்கள் உள்ளார்கள் ஆனால் அங்குள்ளஅரசியற் சூழலானது உறுதியான போராளிகளாக தமதுபணி என்ன என்பதை வெளிப்படையாக கூற விரும்புவதைசாத்தியமற்றது ஆக்குகின்றது. வெளிநாட்டில் கூட இந்த
அறிக்கைக்காக செவ்விகாணப்பட்ட முன்னாள் போராளிகள் தமது அடையாளத்தினை மற்றையவர்களுக்குவெளிப்படுத்த விருப்பமில்லாமல் இருந்தார்கள் அத்துடன்இரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில்அடிப்படையிலே கதைத்தார்கள்.
ஒருவருமே உயிர்தப்பியிருக்க முடியாது என ஆரம்பத்தில்நாங்கள் நம்பிய ஒரு சமர் பற்றிய நம்பமுடியாததகவல்களைக் கேட்ட பின்னர் இந்தக் கதைகள் இலங்கைப்போர் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதி என்பதையும் இதுஆவணப்படுத்தப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்
என்பதையும் நாம் உணர்ந்து கொண்டோம்.
இந்தஅறிக்கையில் இரண்டு பகுதிகள் உள்ளன:பகுதி 01 உயிர்தப்பியவர்களின் கiதைகளை மற்றையசம்பவங்களுடன் இணைத்துக் கூறும் ஒரு விபரணமாகும்.பகுதி 02 ஆனந்தபுரம் சமரின் போது இடம்பெற்ற சர்வதேசமனிதாபிமானச் சட்ட மீறல்கள் பற்றிய ஒரு சட்ட ரீதியானஆய்வு.எனசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
https://itjpsl.com/assets/ITJP-Aanthapuram-report_Tamil_Final.pdf