இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் இந்தியர்கள் பலருடன் நங்கூரமிட்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் அந்த பகுதியிலிருந்து சர்வதேச கடற்பரப்பை நோக்கி பயணித்துள்ளது.
உரிய நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கை அந்த கப்பலுக்கு அவசியமான எரிபொருள் உட்பட ஏனைய தேவைகளை வழங்கியதை தொடர்ந்தே கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தடையால் 20க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட கப்பலில் எத்தனை ஈரானியர்கள் இருந்தார்கள் என்பது தெரியவில்லை அந்த கப்பலில் இருந்தவர்கள் அனேகமாக அதிகளவில் இந்தியர்களாகயிருக்கலாம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டுள்ள ஏனைய கப்பல்கள் போதிய எரிபொருள் இன்மையால் பயணிக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றன.
THE ISLAND