முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்சவின் வங்கிகணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்டபணம் சொத்துக்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வங்கி கணக்கு முடக்கப்படுவது குறித்த அறிவிப்பை கையளிப்பதற்காக முன்னாள் அமைச்சரின் மகனின் நாவல வீட்டிற்கு சென்றவேளை அவர் அங்குஇருக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.