அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கநேரிடலாம் – சஜித் எச்சரிக்கை

அரசாங்கம் ஒடுக்குமுறை பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தினால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்
எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
விசேட அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பொதுமக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையை மூடி மறைப்பதற்கும் அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த முயல்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத சட்டத்தினை அதற்கு பதிலான கடுமையான சட்டத்தின் மூலம் மாற்றீடு செய்வதை விட பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறும் மனித உரிமைகள் ஜனநாயக பாதுகாப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான சட்டங்களை அறிமுகப்படுத்துவதனால் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தைகளுக்கு விசேட சலுகைகளை வழங்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்கநேரிடலாம்.
உத்தேச சட்டங்கள் சிவில் அரசியல் மனித உரிமைகளை பலவீனப்படுத்தும் அதேவேளை யார் பயங்கரவாதி என தீர்மானிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

thiruchi camp
திருச்சியிலிருப்பது சிறப்பு முகாமா? அல்லது சிங்கள அரசு கொல்வதற்கென தமிழீழத் தமிழர்களை ஆள்பிடித்து அனுப்பி வைக்கும் கொலைக்கள கூடமா? வ.கௌதமன்
fmm
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலம் புலனாய்வு ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கான சட்டபூர்வமான பின்னணியை வழங்ககூடும்.- சுதந்திர ஊடக இயக்கம்
wijiya son
முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகனின் வங்கி கணக்குகள் முடக்கம் -
ஸ்பெயினில் நிகழ்ந்த கொடூரமான ரயில் விபத்து குறித்து இதுவரை நாம் அறிந்தவை என்ன?
vetha july
வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 உத்தியோகபூர்வமாக அறிமுகம்.
anura oct 29
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டு விமான சேவை வசதிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம்-
kavantissa
கவந்திஸ்ஸவின் இரத்தத்தால் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் கைகள் கறைபட்டுள்ளன: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
chemmani sithupathi
செம்மணி – மிக உயர்ந்தபட்ச நீதியை வழங்குவதற்கு அரசாங்கம் சர்வதேச உதவியை பெறவேண்டும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு
ships iran
ஈரான் எண்ணெய் கப்பலிற்கு எரிபொருள் உட்பட அவசிய உதவிகளை வழங்கியது இலங்கை
hrw
அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்த மனித உரிமை மீறல்கள் தொடரும் ஆபத்து – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை