தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேக்கும் ஆசாத் மௌலானாவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அஹ_ங்கல ஹோட்டல்( AHUNGALA) குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் நீதிமன்றம் இந்த சந்திப்பு குறித்த விபரங்களை கோரியுள்ளது.
ஹோட்டலில் இருவருக்கும் அறைகள் பதியப்பட்டமை செலுத்தப்பட்ட கட்டணம் போன்ற விபரங்களை குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகிகள் ஒப்படைக்கவேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல் உரிய ஆவணங்களை கையளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா தான் சுரேஸ் சாலியை அஹ_ ங்கலயில் உள்ள ரியு ஹோட்டலில் 2020 ஓகஸட் 15 மற்றும் 16 ம் திகதிகளில் சந்தித்ததாக சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சுரேஸ் சாலே அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெறவில்லை என மறுத்துள்ள போதிலும் சிஐடியினர் தங்களின் விசாரணைகள் மூலம் அந்த ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றதை உறுதி செய்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஹோட்டல் நிர்வாகிகள் தங்களிடம் உள்ள விபரங்களை வழங்குவது அவசியம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.