ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று ஆண்கள் உட்பட நால்வர் பலி – 76பேர் மருத்துவமனைகளில் – பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்

ரம்பேவ மதவாச்சி வீதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 76 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் இவர்கள் அப்பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மூன்று பேருந்துகள் மோதிவிபத்துக்குள்ளானதில் 76 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 61பேர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,அவர்களில் பலருக்கு எலும்புமுறிவு போன்றவற்றிற்காக சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
தலையில் ஏற்பட் காயங்கள் காரணமாக சிலர் தீவிரகண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்,மூவருக்கு எம்ஆர்ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிதீவிரசிகிச்சை பிரிவில் எவரும் அனுமதிக்கப்படவில்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் எவரும் உயிரிழக்கவில்லை.மேலும் நோயாளிகள் எவரையும் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றவேண்டிய தேவையுமில்லை.
காயமடைந்த 25 பேர் மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் பத்து பேர் பின்னர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.விபத்தினை தொடர்ந்து ரம்பேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் பின்னர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்படட்டனர்.
விபத்து காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்,காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அப்பகுதிக்கு சென்றுள்ள அவர்களது குடும்பத்தினர் தங்குவதற்கான இடங்களை  ஏற்பாடு செய்துள்ளோம்.என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இன்று காலை மிகிந்தல பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்;ட ரம்பேவ வெலிஓயா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து ரம்பேவ பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து அதேதிசையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டவேளையே இந்த விபத்து இடம்பெற்றது என தெரிவித்துள்ள பொலிஸார் முந்திச்செல்ல முற்பட்ட வேளை இலங்கை அரசபோக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து மற்றுமொரு  அரசசேவைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது தனியார் பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

nishantha
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க கைது – அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு
899353484_1134206172333435_4712077817965227141_n
மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்
matala mass 1
மாத்தளை மனித புதைகுழி விசாரணை 11ம் திகதி-காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்பாக ஒன்றுகூடவுள்ள உறவுகள்
ajith dhar house
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பல விடயங்களை அம்பலப்படுத்திய பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது தாக்குதல்
gajendra
சட்டவிரோத தையிட்டி விகாரையில் மத நிகழ்வுகளை அநுர அரசாங்கம் ஊக்குவிக்கிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
sonia-gandhi-rahul-gandhi-cwc-pti-_625x300_10_August_19
அப்பாவின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு  நான் வர வேண்டியிருக்கும்": ராகுலின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்தார் சோனியா காந்தி
no psta
"மக்கள்செல்வாக்குச் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வு
Anuradhapura-accident
விபத்தில் சிக்கியது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து – ஐவர் பலி
psta no15
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம் - படையினருக்கு கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்ககூடாது – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்
drones
 ட்ரோன் இறக்குமதியை நியாயப்படுத்தி நளின் பண்டாரகருத்து- ; அது ஒரு அனுமதிப் பத்திரப் பிரச்சனை மட்டுமே என விளக்கம்