அனோஜனின் வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து சவூதி அரேபியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

 அனோஜன் சிவராசாவுக்கு எதிரான சட்ட வழக்கை சவுதி
அரேபியா  முறைப்படி முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

முன்னதாக 2026 அக்டோபர் 13 அன்று சவுதி  அரேபிய உச்ச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, மேல் நடவடிக்கைகளுக்காக வழக்கை மீண்டும் அனுப்பியமை உள்ளிட்ட தொடர்ச்சியான சட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது அரசுத் தரப்பின் தொடர் விசாரணைகளுக்குப் பிறகு, வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த முந்தைய தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 நவம்பர் 11 அன்று சிவராசாவின் குடும்பத்தினரைச் சந்தித்து, வழக்கின் முடிவு மற்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான தற்போதைய ஏற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

சவூதி அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் தனது பாராட்டைத் தெரிவித்துள்ள அதேவேளையில், ரியாத் நகருக்கு விஜயம் செய்த இலங்கைச் சட்ட நிபுணர்களின் பங்களிப்பையும், இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திர முயற்சிகளையும் சுட்டிக்காட்டி நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

அவரை விரைவாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நிர்வாக நடைமுறைகளை பூர்த்தி செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anojan
அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்
anil jayantha11
வரவு செலவுதிட்டத்தை நலன்புரித்திட்டங்கள் உதவிகள் அல்லது வரிச்சலுகைகளை அடிப்படையாக கொண்டுமாத்திரம் பொது மக்கள் மதிப்பிடக்கூடாது- பிரதிநிதியமைச்சர்
kasap
ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியாவின நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
air india
கொல்கத்தா - மும்பை ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் அச்சுறுத்தல்; தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட விமானம்
kasapa1111
"நான் இறந்தால்"  -  கஸ்ஸப தேரர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்
Gnanasara march (1)
பாதயாத்திரையிலிருந்து சத்தியாக்கிரகம் வரை கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது
Kasappa-Thera
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்
nanda2026
பொருளாதார வளர்ச்சிக்கு பாராளுமன்றமே பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு: அரசின் சீர்திருத்தங்களை வரவேற்றார் நிதியியல் குழுத் தலைவர் ஹர்ஷ
lectures
ஒப்பந்தங்கள் பிணைவிதிகளை மீறி வெளிநாடு சென்ற விரிவுரையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய தொகை -3000 கோடி – கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள்
Rambewa-accident-5
ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று ஆண்கள் உட்பட நால்வர் பலி – 76பேர் மருத்துவமனைகளில் - பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்