ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடை – பௌத்த பிக்குகள் வலியுறுத்தல்

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, பௌத்த விநய விதிகளுக்கு அமைவாக மீண்டும் காவியுடை அணிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பௌத்த பிக்குகள் குழுவொன்று அதிகாரிகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.

மகாநாயக்க தேரரின் கோரிக்கைக்கு அமைவாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிவதற்காக, பௌத்த பிக்குகள் குழுவொன்று இன்று (16) சிறைச்சாலைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குத் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியது.

ஞானசார தேரர் சிறையிலிருந்த போது அவரது காவியுடை அகற்றப்பட்டமை பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் சிறைக்குள் காவியுடை அணிவதற்கு அனுமதிக்கும் வகையில் சிறைச்சாலை நிலையான கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், பௌத்த சமய ஒழுக்க விதிகளுக்கு (விநய விதிகள்) அமைவாக ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மகாநாயக்க தேரர் விடுத்த கோரிக்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு, இன்று சிறைச்சாலைத் தலைமையகத்திற்குச் சென்ற பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ
TRUMP ZI PUTIN
சீனாவில் டிரம்ப் புடின் சந்திப்பு
carney no
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறி: ஆசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி
court-judge-hammer-gavel-696x398
கிரிஷ் வழக்கு – நாமலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை
shashi11
சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
gnasaraa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் சிறைத்தண்டனை உறுதி -மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
gajendran
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கும் தேவையை நிறைவேற்றும் விதமாகவே பேராசிரியர் ராஜ் சோமதேவா  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.-கஜேந்திரன்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு; நாளை குற்றப்பத்திரிகை கையளிப்பு