ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு
ரோகிங்கியா மக்களுக்கான நீதியைத் தேடும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். தாம் எதிர்கொண்ட இனப்படுகொலைக்குப் பொறுப்புக்கூறலையும், தமது பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமை மற்றும் தற்காப்பு உரிமைக்கான அங்கீகாரத்தையும் தொடர்ந்து கோரி வரும் ஈழத் தமிழர்களுக்கும் அதே நீதி அர்ப்பணிப்பு நீட்டிக்கப்பட வேண்டும்.
நீதி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க முடியாது. கலாநிதி கிங் நமக்கு நினைவூட்டியது போல, அநீதியின் முன்னால் நல்லவர்களின் மௌனம் அது தொடர்வதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
தமிழ் மக்களின் நியாயமான குறைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் வரை, பொறுப்புக்கூறல், நீதி மற்றும் எமது உரிமைகளின் அங்கீகாரம் ஆகியவற்றைக் கோரி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்