வடக்குகிழக்கில் இராணுவமயமாக்கலை கைவிடுதல், நிலங்களை மீள கையளித்தல் -அதிகாரப்பகிர்வில் அர்த்தபூர்வமான முன்னேற்றம் அவசியம் – முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக்

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும்- புதிதாக பதவியேற்கவுள்ள அமெரிக்க காங்கிரஸ் மனித உரிமைகள் விடயத்தினை உன்னிப்பாக அவதானிக்க கூடும் – முன்னாள்அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக்

அமெரிக்காவிற்கான புதிய இலங்கைத் தூதுவரை எவ்வித தாமதமுமின்றி நியமிக்குமாறும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இணையான கவனத்தை மனித உரிமைச் சீர்திருத்தங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ. பிளேக்  வலியுறுத்தியுள்ளார்.

2027 ஜனவரியில் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள புதிய அமெரிக்கக் காங்கிரஸ் பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகத்துடனும் காங்கிரஸுடனும் சுறுசுறுப்பாகச் செயற்படக்கூடிய இராஜதந்திரப் பிரதிநிதித்துவம் இலங்கைக்கு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுடன் முன்னாள் தூதுவர் மஹிந்த சமரசிங்க மேற்கொண்ட செயற்பாடுகளை அவர் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாகப் பதவியேற்கவுள்ள அமெரிக்கக் காங்கிரஸ், வர்த்தக பங்காளிகளின் மனித உரிமை நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக ஆராயக்கூடும் என எச்சரித்துள்ள பிளேக், ஊழல் ஒழிப்பில் ஜனாதிபதி திசாநாயக்கவின் முன்னேற்றத்தை அங்கீகரித்த போதிலும், முன்னுரிமை வர்த்தக வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்கான சாத்தியங்களை வலுப்படுத்த இலங்கையின் சர்வதேச அந்தஸ்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது தாம் தூதுவராக இருந்த காலத்திலிருந்தே தீர்க்கப்படாமல் உள்ள முன்னுரிமை விடயம் எனக் குறிப்பிட்ட அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள், காணி விடுவிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் அர்த்தமுள்ள முன்னேற்றம் காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 19 வியாழக்கிழமை தாஜ் சமுத்ரா கொழும்பு கிளப்பில் பாத்ஃபைண்டர் பவுண்டேஷன் நடத்திய “America Votes, South Asia Adjusts: Implications for Sri Lanka and the Region” எனும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். கலாநிதி டேனியல் எஸ். மார்க்கி, எம். ஜே. அக்பர், தூதுவர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் பங்கேற்ற இக் கருத்தரங்கை, ஓய்வுபெற்ற தூதுவர் பெர்னாட் குணதிலக்க நெறிப்படுத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

rohingya village burning
புகைமூட்டத்தை கண்டால் அருகில் உள்ள கிராமம் தாக்கப்படுகின்றது என அர்த்தம் - ஓடுங்கள் - ரொகிங்யா மக்கள் தங்கள் இனப்படுகொலை கதைகளை கூறுகின்றனர்
Raj-Somadeva
ராஜ்சோமதேவ ஒரு தடயவியல் மருத்துவ நிபுணர் இல்லை – அவர் வெளியிட்டது சட்டமருத்துவ அறிக்கையில்லை அது ஒரு தடயவியல் தொல்லியல் அறிக்கை – நீதியமைச்சர்
Mullivaikkal yard memorials (10)
ஒரு நாடு முன்வந்தாலே போதும்
court-judge-hammer-gavel-696x398
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல்
rohinya
நீதி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க முடியாது
images (26)
ஜனாதிபதி அனுர குமாரவை தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கின்றோம் – பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன்!
police111
சுன்னாக பொலிஸாரின் அச்சுறுத்தம் செயற்பாடு- விசாரணை நடத்துமாறு பிரதமர் அலுவலகம் பணிப்புரை
cid
செம்மணியை அடையாளம் காட்டும் நிலையில் சோமரத்ன இல்லையாம்!நீதிமன்றத்தில் சி.ஐ.டி. தெரிவிப்பு
ratnavel
செம்மணியில் மீட்கப்பட்ட இராணுவ உபகரணம் தொடர்பில் சோமதேவ மௌனித்தமை ஏன்? – சட்டத்தரணி ரட்ணவேல் கேள்வி
iMRANKHAN-GETTY-1
பாக்கிஸ்தானுடனான உறவுகள் குறித்து கரிசனை- இம்ரான்கான் விடுதலைப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிராகரிப்பு