பாதாள உலகை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து தப்பி இந்தியா செல்வதற்கு பயன்படுத்திய படகினை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அராலியில் இந்த இயந்திர படகை சிசிடி பிரிவினர் கைப்பற்றியுள்ளதாகவும் இது செவ்வந்தி இந்தியா தப்பிச்செல்வதற்கு உதவிய ஆனந்தன் என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனந்தன் என்பவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட படகையையும் அதனை செலுத்தியவரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
