ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவுசெலவுதிட்டம் மருத்துவர்களை விட நாய்களிற்கு சாதகமாக உள்ளது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவதெரிவித்துள்ளார்
2026 ம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டம் நாட்டின் சுகாதார துறையினரை புறக்கணித்துவிட்டு விலங்குகளின் நலன்களிற்கான திட்டங்களிற்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுதிட்டத்தில் பெருமளவு நிதியை விலங்குகள் நலன் திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளனர்,ஆனால் இளம் மருத்துவர்கள் போன்றவர்களை ஊக்குவிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மருத்துவமனைகளிலும் முதன்மை பராமரிப்பு மையங்களிலும் சுகாதார பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்ளின் நலன்கள் குறித்து வரவுசெலவுதிட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை,சிறிய நிவாரணமாவது பாரட்டைபெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.