வேலணை பிரதேச செயலக செய்திகள்-அம்பாந்தோட்டையிலிருந்து வேலணை பிரதேசத்திற்கு விஜயம் செய்த இளைஞர்கள்

அம்பாந்தோட்டையிலிருந்து வேலணை பிரதேசத்திற்கு விஜயம் செய்த இளைஞர்கள் வேலணை பிரதேச செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாடினர்

தீவக வலய ஆசிரியர்களுக்கான” பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான  பயிற்சி-


யாழ் சமூக செயற்பாட்டு மையம் KNH நிறுவனத்தின் அனுசரணையுடன் தீவகத்தின் வேலணை, காரைநகர் ஊர்காவற்துறை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும்
“சுய உதவிக் குழு அணுகு முறை ஊடாக பெண்களை வலுப்படுத்துவதனூடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்”
எனும் செயற்திட்டத்தின் கீழ்
யாழ்ப்பாணம் J Guest விருந்தினர் விடுதியில்
தீவக வலய ஆசிரியர்களுக்கான” பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான (TOT) பயிற்சியானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மதிப்பார்ந்த உயர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர். திரு.ந.தயாபரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.


இதில் வளவாளர்களாக
கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஸ்ர விரிவுரையாளருமான மதிப்பார்ந்த திரு கலாநிதி.பா.தனபாலன் அவர்களும்
யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஸ்ர விரிவுரையாளர் திரு.கு.கமலநாதன் அவர்களும்
வேலணை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி.நா.கிருஷாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்

வேலணை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவி பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

நலிவுற்ற நிலையில் உள்ள இரு குடும்பங்களுக்கு நலன் விரும்பி ஒருவரால்  உலர் உணவு பொதி அன்பளிப்பு செய்யப்பட்டது.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்