கோத்தபாய காலத்தில் சிங்கள மக்களை வவுனியா தெற்கு செட்டி குளம் பகுதியில் குடியமர்த்துடன் நோக்கத்துடன் மல்வத்து ஓயா திட்டத்தை முன்னெடுக்க முயன்ற வேளை அதனைநாங்கள் கடுமையாக எதிர்த்தோம்- தற்போது தேசிய மக்கள் சக்தி அரசும் அதனை கையிலெடுத்துள்ளது- நாடாளுமன்ற உரையில் கஜேந்திரகுமார்

கோத்தபாய காலத்தில் நாங்கள் கடுமையாக எதிர்த்த மல்வத்து ஓயா திட்டத்தை தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கையிலெடுத்து அதற்கு வரவு செலவுதிட்டத்தில் 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு என்ற பெயர் உச்சரிக்கப்பட்டது இரண்டு இடங்களில் தான்.
அதில் ஒன்று “மல்வத்து ஓயா திட்டம்”.
வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டம் இந்தத் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்கம் ஆகும்.
இந்த மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் உண்மையில் ஆக பதினைந்தே பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே( இந்த நீர்ப்பாசன திட்டத்தில் அவர்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதால்) பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்த நிலையில்  கோத்தபாய அரசாங்கம் அனுராதபுரத்தில் இருக்கின்ற 1500 சிங்கள குடும்பங்கள் இந்த நீர்ப்பாசன திட்டத்தினால் தமது வாழ்வை இழப்பார்கள் எனக் கூறி அவர்களை வவுனியா தெற்கு செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்த முயன்றிருந்தது. அந்த நேரத்திலேயே இந்த நாங்கள் கடுமையாக எதிர்த்திருந்தோம்.
இப்போது அந்தத் திட்டத்தை  தேசிய மக்கள் சக்திஅரசு கையில் எடுத்திருக்கிறது.
இதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி அந்த மண்ணின் மக்களோடு இயைந்து  தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின்  அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை .
நாம் எதிர்ப்பதெல்லாம் வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் (அரசின் உதவியுடன்) மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு