முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவாரா என்பது குறித்துn இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சட்டவிரோதமாக பெற்ற பணத்தை பயன்படுத்தி 50 மில்லியனிற்கு நிலமொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கதிரையிலிருந்து தவறிவிழுந்ததை தொடர்ந்து முதுகெலும்பு மற்றும் நரம்பு பாதிப்புகளிற்கு சிகிச்சை பெற்றுவருவதாக பசில் ராஜபக்ச மே மாதம் தெரிவித்திருந்தார்.
ஆறுமாதங்களிற்கு விமானப்பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க மருத்துவர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் நீதிமன்ற நடவடிக்கைகளிற்கு ஆஜராவது குறித்த சந்தேகம் காணப்படுகின்றது.
முன்னைய நீதிமன்ற நடவடிக்கைளின் போது பசில்ராஜபக்ச சமூகமளிக்காததை தொடர்ந்து அரசதரப்பினர் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான எதிர்கட்சிகளின் பாரியபேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 21ம் திகதியே பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.
