நீங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது டிக்டாக்கில் இலங்கையைத் தேடினால் போதுமான கட்டமைக்கப்பட்ட தகவல் உங்களுக்குக் கிடைக்காது. உள்ளடக்கம் இருந்தாலும் அது சிதறிக்கிடக்கிறதுஎன இந்தியாவின் மிகப்பெரிய ஒன்லைன் பயணதளமான மேக்மை டிரிப்பின் தலைமை வர்த்தக அதிகாரி ஜஸ்மீந் சிங் தெரிவித்துள்ளார்
சுற்றுலா வளர்ச்சியை விரைவுபடுத்த இலங்கைக்கும் இந்தியாவின் மிகப்பெரியஒன்லைன் பயணத் தளத்திற்கும் இடையே வலுவான மூலோபாய ஒத்துழைப்புக்குஅவர் அழைப்பு விடுத்துள்ளார் .
உலகின் வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டுப் பயணச் சந்தையில் இலங்கையின் இருப்பை அதிகரிக்க “சரியான அனைத்து அடிப்படைக் கூறுகளும்” இலங்கையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
“கங்கை முதல் களனி வரை: நட்பு மற்றும் கண்டுபிடிப்பின் பயணம்” (“From the Ganges to the Kelani: A Voyage of Friendship and Discovery”””) என்ற தலைப்பிலான இந்திய – இலங்கை சுற்றுலா இணைப்பு மன்றத்தில் பேசிய சிங் மேக்மைட்ரிப்பின் இரண்டு முக்கிய தளங்களில் இலங்கை ஐந்தாவது பெரிய தேடல் இடமாக (largest search destination ) தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் இது வலுவான தேவைக்கான ஆற்றலைச் சுட்டிக்காட்டுகிறது.

எனினும் இலங்கையின் டிஜிட்டல் இருப்பு) இன்னும் துண்டு துண்டாக ) உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
“ “நீங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது டிக்டாக்கில் இலங்கையைத் தேடினால் போதுமான கட்டமைக்கப்பட்ட தகவல் உங்களுக்குக் கிடைக்காது. உள்ளடக்கம் இருந்தாலும் அது சிதறிக்கிடக்கிறது. எல்லாவற்றையும் ஒன்றாகக் கொண்டுவருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.
பயனர்களின் பயணப் பாதைகளை) பல ஆண்டுகளாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட மேக்மைட்ரிப்பின் தரவு சார்ந்த தனிப்பயனாக்க எந்திரம் எந்தப் பயணிகள் எப்போது எந்த அலைவரிசையில் இலங்கை உள்ளடக்கத்துடன் குறிவைக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிய உதவும்.
“எங்கள் தளத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பயனரின் விருப்பத்தேர்வுகள் மாறுகின்றன. ஆனால் இலங்கை எங்களுக்கு சரியான உள்ளடக்கத்தை வழங்கினால் அதை யாருக்குக் காண்பிக்க வேண்டும் என்பதையும் அதை எப்படி முன்பதிவுகளாக மாற்றுவது என்பதையும் நாங்கள் சரியாக அறிவோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
. இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் சர்வதேச பயணத் தேவையை வடிவமைக்கும் பல போக்குகளை ) சிங் கோடிட்டுக் காட்டினார்.
“2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஆண்டுதோறும் 50 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவர்களில் 70வீதமானவர்கள் பேர் சுமார் ஐந்து மணி நேர விமானப் பயண நேரத்திற்குள் இருக்கும் குறுகிய தூர இடங்களைத் தேர்வு செய்வார்கள். இது இலங்கையை ஒரு முதன்மையான இடத்தில் வைக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
read more-
ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 17 வயதில் இணைந்தவர் இன்று இந்தியாவின் மிகப்பெரிய பயணதளமான மேக் மை டிரிப்பின் தலைமை அதிகாரி–
https://www.tamiljobmarket.com/3810