அரிசி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என அமைச்சபு சுனில்ஹந்துநெத்தி தெரிவிக்கும் ஆடியோ ஒன்று வெளியில் கசிந்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சபையில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட ஒலிநாடாவில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அனுமதிப்பத்திரம் இல்லை அது பிரச்சினையில்லை அது பிரச்சினையில்லை என தெரிவிக்கின்றார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்திரலால் பெர்ணாண்டோ சட்டவிரோத அரிசி இறக்குமதி என தெரிவிக்கப்படுவதை கைப்பற்றுவதற்கோ தண்டப்பணம் அறவிடுவதற்கோ அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அந்த ஒலிநாடாவை முழுமையாக வெளியிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுமதிப்பத்திரம் இல்லை என்றால் அது சட்டவிரோதமானதுஇஇவ்வாறான எத்தனை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்இஅனுமதிப்பத்திரமின்றி இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளை அமைச்சர் மறைக்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டு தன்னை அவமானப்படுத்தும் நடவடிக்கை என அமைச்சர் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.