வடமாகாணத்தில்எந்தவொரு நீர்த்தேக்கத்திலோ அல்லது நீர்ப்பாசனத் திட்டங்களிலோ தற்போதைக்கு எவ்வித ஆபத்துகளும் அடையாளம் காணப்படவில்லை-மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர்

வடக்கு மாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்கள் வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் திரு. த.இராஜகோபுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களின் இன்றைய (27.11.2025) நிலவரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மாகாணப் பணிப்பாளர் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையினால் 13 நடுத்தர குளங்கள் வான் பாய்கின்ற போதிலும்இ மாகாணத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் தற்போதைக்கு எவ்வித ஆபத்து நிலைகளும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மழைவீழ்ச்சி நிலவரம் (26.11.2025 காலை 7 மணி முதல் 27.11.2025 காலை 7 மணி வரை): கடந்த 24 மணித்தியாலங்களில் வவுனியா மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வவுனியா நிலையம்: 165 மி.மீ
சேமமடு நிலையம்: 151 மி.மீ
தண்ணிமுறிப்பு நிலையம்: 125 மி.மீ
அதேவேளைஇ யாழ்ப்பாணம் மற்றும் தொண்டமானாறு பகுதிகளில் மிகக் குறைந்தளவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
குளங்களின் நீர்மட்டம் மற்றும் கொள்ளளவு விபரம்: வடக்கு மாகாணத்திலுள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர குளங்களில்:
13 குளங்கள் வான் பாய்கின்றன.
08 குளங்கள் 75வீதம் – 100வீதம் வரை நிரம்பியுள்ளன.
12 குளங்கள் 50வீதம் – 74 வீதம்வரை நிரம்பியுள்ளன.
19 குளங்கள் 50வீதத்திற்கு இற்கு குறைவாகவே நிரம்பியுள்ளன.
முக்கிய பாரிய குளங்களின் நீர்மட்டம்: பிரதான குளங்களின் நீர்மட்டம் தற்போது பாதுகாப்பான அளவிலேயே உள்ளது:
இரணைமடு குளம்: 21′ 11″ (35.22 வீதம்கொள்ளளவு)
வவுனிக்குளம்: 15′ 09″ (34வீதம் கொள்ளளவு)
முத்தையன்கட்டு குளம்: 14′ 03″ (40வீத கொள்ளளவு)

சில பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளதால் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. எவ்வாறாயினும் எந்தவொரு நீர்த்தேக்கத்திலோ அல்லது நீர்ப்பாசனத் திட்டங்களிலோ தற்போதைக்கு எவ்வித ஆபத்துகளும் (சுளைம) அடையாளம் காணப்படவில்லை. குளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்