நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியை கோருவது குறித்து ஆராயவுள்ளது.
ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச உதவிகளை கோருவது தொடர்பில் இன்று அரசாங்கம் ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி நாடாளவிய ரீதியிலான அவசரகால நிலைமையை அறிவிக்க மாட்டார் ஆனால் சர்வதேச உதவியை கோருவது என தீர்மானிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.