இலங்கை ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் இந்திய பிரதமர்=சாகர் பந்து’ நடவடிக்கை தொடரும்: இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் பரவலான பேரழிவு குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடி மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்தத் தேவைப்படும் நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்தியா உறுதியான ஆதரவுடன் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி திசாநாயக்க தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன்இ மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தியாவின் சரியான நேரத்திலான மற்றும் பயனுள்ள பதிலளிப்பு முயற்சிகளுக்காக இலங்கை மக்களின் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

தற்போது நடந்து வரும் ‘சாகர் பந்து'( நடவடிக்கையின் கீழ் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணத்தை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்று பிரதமர் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உறுதியளித்தார்.

இலங்கை புனரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும்போதும் பொதுச் சேவைகளை மீண்டும் தொடங்கும்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும்போதும் இந்தியா தனது ‘மகாசாகர் நோக்கு’  மற்றும் ‘முதல் பதிலளிப்பவர்’ என்ற தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ப வரும் நாட்களில் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை