டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெதி இன்று தெரிவித்தார்.
வீடு கட்டுவதற்கும் காணி வாங்குவதற்கும் தலா 10 மில்லியன் ரூபாயை வழங்க அரசாங்கம் தயாராக உள்ள போதிலும், பொருத்தமான இடங்களில் வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களை பொது வசதிகள் கொண்ட இடங்களில் உள்ள வீடமைப்புத் தொகுதிகளில் மீள்குடியேற்றுவது குறித்து அரசாங்கம் அவர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அரசியல் தொடர்புகளினால் இவ்வாறான கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கட்டுமானங்களுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்காது என்றும் தெரிவித்தார்.