காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா (Al Shifa) மருத்துவமனையில், சுகாதார அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு நிபுணர் சான்றிதழ்களைப் பெற்ற 170 மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதிதாகப் பட்டம் பெற்ற மருத்துவர்களைக் கௌரவிப்பதற்காக மருத்துவமனையின் தோட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர்.


இனப்படுகொலையின் போது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் இந்த மருத்துவமனை பெரும் சேதத்தைச் சந்தித்ததுடன், மருத்துவமனையின் பெரும்பாலான கட்டிடங்களும் உபகரணங்களும் அழிக்கப்பட்டன அல்லது இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.