இஸ்ரேலில் பாலஸ்தீனியரின் தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படும் மோதல் மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற தொடர்ச்சியான “பயங்கரவாத தாக்குதலில்” இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரி கிழக்கு நகரமான பெய்ட் ஷீனில் (Beit Shean) பாதசாரி ஒருவர் மீது வாகனத்தை மோதியதாகவும், பின்னர் அங்கிருந்து சுமார் 12.5 கி.மீ (8 மைல்) தொலைவிலுள்ள ஈன் ஹரோட் (Ein Harod) பகுதிக்குச் சென்று பெண் ஒருவரை கத்தியால் குத்தியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

இறுதியில் அஃபுலா (Afula) நகருக்கு வெளியே ஒரு பொதுமக்களால் அவர் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டார். தாக்குதலை நடத்திய சந்தேக நபர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கு பகுதியில் உள்ள கபடியா (Qabatiya) கிராமத்தைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இஸ்ரேலின்  (Magen David Adom) அவசர சேவைப் பிரிவின் தகவல்படி, பெய்ட் ஷீனில் நிகழ்ந்த வாகன மோதலில் 68 வயதுடைய முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 16 வயது சிறுவன் காயமடைந்தார். ஈன் ஹரோட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் 18 வயது இளம்பெண் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கபடியா பகுதியில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இராணுவத்தை “உடனடியாகவும் வலுவாகவும்” செயற்படுமாறு பணித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவியதாக இராணுவம் கூறியது. குறித்த 37 வயதுடைய நபர் இஸ்ரேலில் சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்தவர் என்றும், தனது முதலாளியின் வாகனத்தைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேலின் கான் நியூஸ் (Kan News) ஊடகம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்