இலங்கையின் மடிக்கணினி மற்றும் கணினி உபகரணங்கள் சந்தைசட்டவிரோத இறக்குமதிகள் போலி தயாரிப்புகள்பாவிக்கப்பட்ட சாதனங்களினால்பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது -இலங்கை தகவல் தொழில்நுட்ப துறை சம்மேளனம்

இலங்கையின் மடிக்கணினி மற்றும் கணினி உபகரணங்கள் சந்தையானது, சட்டவிரோத இறக்குமதிகள், போலி தயாரிப்புகள் மற்றும் முறையான கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நாட்டிற்குள் கொண்டுவரப்படும் பாவிக்கப்பட்ட சாதனங்களினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்பத் தொழில்துறை சம்மேளனம் (FITIS) எச்சரித்துள்ளது.

இவ்வாறான முறைசாரா வழிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகள், அங்கீகரிக்கப்பட்ட சட்டபூர்வமான வணிகங்களைப் பாதிப்பதோடு, அப்பாவி நுகர்வோரைத் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ரீதியான பாரிய ஆபத்துகளுக்கு உள்ளாக்குவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

FITIS ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலின் போது, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் மடிக்கணினிகள், டெஸ்க்டாப் கணினிகள், மொனிட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களில் சுமார் 50 சதவீதமானவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது பாவிக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இந்தத் தயாரிப்புகள் சரியான பெறுமதியை வெளிப்படுத்தாமலும், வரி செலுத்தப்படாமலும் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதால், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களின் விலைகளை விட 25-30 சதவீதம் குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

குறைந்த விலைகள் ஆரம்பத்தில் நுகர்வோரைக் கவர்ந்தாலும், இதில் மறைந்துள்ள அபாயங்கள் பாரியவை எனத் துறைசார் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். முறைசாரா வழிகளில் விற்கப்படும் பல சாதனங்களில் அசல் மென்பொருள்கள் (Genuine OS) இருப்பதில்லை. அதற்குப் பதிலாக போலி மென்பொருள்கள் (Pirated software) நிறுவப்படுவதால், பயனர்கள் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சட்டச் சிக்கல்கள் மற்றும் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அத்துடன், இவற்றுக்குத் தயாரிப்பாளரின் உத்தரவாதம் (Warranty) அல்லது விற்பனைக்குப் பின்னரான சேவைகள் கிடைப்பதில்லை.

வரி செலுத்தி, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இதனால் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக FITIS வலியுறுத்தியுள்ளது. இது முதலீடுகள் குறைவதற்கும், வேலைவாய்ப்புகள் பறிபோவதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பழைய மின்னணு சாதனங்களின் வருகையினால் இலங்கையின் மின்னணு கழிவு (E-waste) பிரச்சினையும் அதிகரித்துள்ளது. பயணிகள் பொதிகளுடன் வணிக ரீதியான அளவில் இவ்வாறான பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான முறையான கண்காணிப்பு பொறிமுறை இல்லை என்பதும் இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் பங்காளர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க FITIS தீர்மானித்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்