இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 இல் வரலாற்றுச் சாதனை வருவாயைப் பதிவு செய்துள்ளது;-ஜனாதிபதி விஜயம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் அதிகூடிய வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.பி. அறுகொட தெரிவித்துள்ளார். திணைக்களம் தனது எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டியுள்ளதோடு, சுமார் ரூ. 300 பில்லியன் மேலதிக உபரியுடன் 2026 ஆம் ஆண்டிற்குள் நுழைய இது வழிவகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க தலைமையில் இன்று (30) காலை இலங்கை சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட செயல்திறனை மீளாய்வு செய்யவும், 2026 ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டங்களை ஆராயவும் ஜனாதிபதி இன்று காலை இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்தியாவசியமான அரச வருவாயை ஈட்டுவதிலும், பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதிலும் இலங்கை சுங்கம் வகிக்கும் முக்கிய பங்கை பாராட்டிய ஜனாதிபதி, முழு சுங்க ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை சுங்கம் நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்று என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அதன் செயல்பாடுகளை வினைத்திறனான, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க வகையில் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், 2026 ஆம் ஆண்டில் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல, புதிய திட்டங்கள் மற்றும் உத்திகளுடன் அனைத்து அதிகாரிகளும் கூட்டாகச் செயல்படுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது, அந்த நேரத்தில் போதுமான ரூபாய் வருமானத்தை ஈட்டவும், போதிய வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு முடியாமல் போனதே முக்கிய காரணம் என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். வருமான இலக்குகளை அடைவதன் மூலம் அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்றும், சமீபத்திய அனர்த்த சூழ்நிலைகளைக் கையாள்வதற்கும் இந்தத் திறன் இன்றியமையாததாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் முன்னேற்றம் குறித்தும், 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மூலோபாயத் திட்டங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதுடன், பல புதிய கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இலங்கை சுங்கம் தற்போது வருவாய் சேகரிப்பு, வர்த்தக வசதிப்படுத்தல், சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகிய நான்கு முக்கிய தூண்களின் கீழ் இயங்குகிறது. இந்த ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.

ஊழலைத் தடுப்பதற்கும், ஒழுக்கமான நிறுவன கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட ‘உள்விவகாரப் பிரிவு’ (Internal Affairs Unit) வினைத்திறனாகச் செயல்படுவது இதன்போது தெரியவந்தது.

சுங்க நடவடிக்கைகளில் நிலவும் நெரிசல், தாமதங்கள் மற்றும் ஊழல் தொடர்பான நீண்டகாலப் புகார்களுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சரக்கு ஆய்வு முறைகளை நவீனமயமாக்கும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விபரங்களைக் கேட்டறிந்தார்.

இக்கலந்துரையாடலில், 2026 ஆம் ஆண்டிற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை சுங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, பயிற்சி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

நாட்டிற்குள் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் முயற்சிகளைத் தடுப்பதில் விமான நிலையங்களின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் தனது கடமை குறித்து முழுமையான விழிப்புணர்வுடன் இலங்கை சுங்கம் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.என். ஹப்புகல, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.பி. அறுகொட, பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு