திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை – இருபது வருடங்கள் – மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் டப்பிளினில் இடம்பெற்ற இலங்கை குறித்த மக்கள் தீர்ப்பாயத்திற்கு தெரிவித்தது என்ன?

2006 ஜனவரி 2 ஆம் தேதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தை மருத்துவர் மனோகரன் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியின் தமிழ் மொழிபெயர்ப்பு–1

–

எனது பெயர் காசிப்பிள்ளை மனோகரன் நான் தேவகுஞ்சராம்பாளை மணமுடித்தேன்.எனக்கு வயது 56 நான் 1951ம் ஆண்டு பிறந்தேன்.நானும் எனது மனைவியும் மருத்துவர்கள் நாங்கள் திருகோணமலையில் மருத்துவநிலையமொன்றை நடத்தினோம்.இதன் காரணமாக நாங்கள் எங்கள் சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்கினோம்.எங்களுடைய முன்னைய வீட்டு முகவரி 13 சென்மேரிஸ் வீதி திருகோணமலை இலங்கை.நாங்கள் இலங்கை தமிழர்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றோம்.எனக்கு ஐந்து பிள்ளைகள் நான்கு ஆண்கள் ஒரு பெண்.எனது புதல்வர்களின் பெயர்கள் ஜெயகர்,தேவசரிநிகர்,ஸ்ரீகிருஸ்ணகர், ரஜிகர்,மகள் பெயர் தர்சிகா.நான் பேர்உயிருடன் உள்ளனர் ஆனால் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் திகதி பிறந்த எனது மூன்றாவது மகன் ரஜிகர் 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலை துறைமுகவீதியில் காந்தி சிலைக்கருகில் கொல்லப்பட்டார்.

2- எனது மகனின் கொலையாளிகளை கண்டுபிடிப்பற்கான விசாரணை ஆணைக்குழு அல்லது எந்த விசாரணை அமைப்பிற்கும் உதவுவதற்காக நான் சுயவிருப்பத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகின்றேன்..இந்த அறிக்கை என்பது முற்றும் முழுதாக எனது மகனின் மரணம் மற்றும் அதன் பின்னர் இடம்;பெற்ற சம்பவங்கள் தொடர்பான சூழ்நிலைகள் சம்பந்தப்பட்டது.இந்த அறிக்கையை நான் வெளியிடுவதன் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பது எனது நம்பிக்கை.அதன் பின்னரும் எனக்கும் எனது குடும்பத்தவர்களிற்கும் மன நிம்மதி கிட்டும்.

3-
எனது மகனின் மரணம் தொடர்பான விடயங்களை கூறுவதற்கு முன்னர்,இலங்கையில் தொடர்ந்து தங்கியிருந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் காரணமாக எங்கள் பாதுகாப்பிற்காக நானும் எனது மனைவியும் எனது பிள்ளைகளும் இலங்கையிலிருந்து தப்பிவெளியேறிவிட்டோம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றோம். நான் இலங்கையிலிருந்து ஏன் வெளியேறினேனோ அந்த காரணத்திற்காக நான் தற்போது எங்கிருக்கின்றேன் என்பதை இந்த அறிக்கையில் தெரிவிக்க மாட்டேன் சாட்சியமளிப்பதற்காக நான் இலங்கைக்கு திரும்பவும் தயாரில்லை.ஆனால் தேவைப்பட்டால் வீடியோ கொன்பரஸ் முறை மூலமோ அல்லது வேறு வழிகள் மூலமோ சாட்சியமளிக்க நான் தயார்.இது தொடர்பான ஏற்பாடுகளை இலங்கையின் நீதித்துறையை சாரதவர்களோ அல்லது பாதுகாப்பு சேவையை சாரதவர்களோ செய்தால் மாத்திரமே நான் வீடியோ கொன்பரன்ஸ் முறை மூலம் சாட்சியமளிப்பேன்.இலங்கையின் நீதித்துiறையை சேர்ந்தவர்களிற்கு நான் தற்போது வசிக்கும் இடத்தை தெரிவிப்பதற்கு நான் இணங்கப்போவதில்லை.நான் எங்கிருக்கின்றேன் என்பது நான் இந்த அறிக்கையை வழங்குபவர்களிற்கு தெரியும் அவர்கள் மூலம் என்னை தொடர்புகொள்ளலாம்.

4
இறுதியாக, உயிரிழந்த எனது மகனின் வாழ்க்கை பற்றி சில விடயங்களை பகிர்ந்துகொள்கின்றேன்.நான் அவரை எளிமையான நேசம் மிகுந்த கண்ணியமான இளைஞன் என வர்ணிப்பேன்.அவர் விளையாட்டில் காட்டிய ஈடுபாடு காரணமாகவும், எங்கள் மகன் என்பதாலும் அவர் சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்டவராகவும் அதிகளவு பிரபல்யமானவராகவும் காணப்பட்டார்.அவர் மிகச்சிறந்த டேபிள்டெனிஸ் வீரர்,டேபிள் டெனிஸ் விளையாட்டில் உயர்தர வீரராக காணப்பட்ட அவர் திருகோணமலை டேபிள் டெனிஸ் சங்கத்தின் செயலாளராகவும் காணப்பட்டார்.எனது மகனே திருகோணமலை சதுரங்க சங்கத்தின் தலைவர்.எனக்கு தெரிந்தவரை அவருக்கு அரசியல் ஈடுபாடு எதுவும் இருக்கவில்லை.அவரை பொறுத்தவரை அவர் தனது கா.பொ.உயர்தர பரீட்சை குறித்தும் டேபிள்டெனிஸ் சதுரங்கம் குறித்தும் இனமத பாகுபாடின்றி சமூகத்தில் உள்ள ஏனையவர்களிற்கு அதனை கற்பிப்பது குறித்தும் மாத்திரமே ஆர்வம் கொண்டிருந்தார்.
5
டிசம்பர் மாதம் முடிவடைந்து ஜனவரி மாதம் ஆரம்பமாகும் காலப்பகுதி பிள்ளையார் விரதம் எனப்படும் இந்து விரத காலமாகும்.இக்காலப்பகுதியில் இந்துக்கள் விரதமிருந்து ஆலயத்திற்கு செல்லவேண்டும்.2006 ஜனவரி மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறுமணிக்கு ரஜிகர் எனது மனைவியிடம் தான் கணேஷா கோயிலிற்கு செல்வதாக தெரிவித்தார்.அவ்வேளை நான் ஹோலில் அமர்ந்து சில மருத்துவநூல்களை வாசித்துக்கொண்டு தொலைக்காட்சியும் பார்த்துக்கொண்டிருந்தேன்.எனது மனைவி வீட்டில் உள்ள தனது மருத்துவநிலையத்தில் நோயாளிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.

6.
7.35 மணியளவில் எனது வீட்டிற்கு அருகில் குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்டேன்.எனக்கு நேரம் சரியாக ஞாபகமிருக்கின்றது ஏனென்றால் நான் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து ஹோலில் உள்ள வீட்டின் மணிக்கூட்டை பார்த்தேன்.யாழ்ப்பாணத்தில் பல வருடங்கள் வாழ்ந்ததால் துப்பாக்கி சூடு குண்டுவெடிப்பு பட்டாசு ஆகியவற்றின் சத்தங்களை வேறுபடுத்தி பார்ப்பதற்கு நான் அறிந்திருந்ததால் எனக்கு அது வெடிகுண்டு சத்தம் என நன்கு தெரியும்.

7
அந்த குண்டு சத்தம் கேட்டு ஐந்து பத்து நிமிடங்களிற்குள் எனது இரண்டு மகன்மார் உடனடியாக வீடு திரும்பியிருந்தனர்.ரஜிகர் வரவில்லை. ரஜிகரிடம் அவரது சொந்த கையடக்க தொலைபேசியிருந்தது,எனது பிள்ளைகள் ஏதாவது சிக்கலான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால் உடனடியாக எங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வது வழமை.ஒரு சில நிமிடங்களிற்குள் ரஜிகர் என்னை தனது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார், “அப்பா எங்களை சுற்றி படையினர் நிற்கின்றனர் என்றார். எனது மகன் என்னை மூன்று முறை தொடர்புகொள்ள முயற்சி செய்திருக்கின்றார்.அவர் கொல்லப்பட்ட பின்னர் அவரது கையடக்க தொலைபேசியை ஆராய்ந்த வேளை அவர் அந்த சம்பவத்திற்கு முன்னர் ஒரு மிஸ்டுகோல் எடுத்துள்ளது தெரியவந்தது.
அவர் என்னுடன் இறுதியாக தொடர்புகொண்ட பின்னர் அப்பா என அனுப்பிய குறுஞ்செய்தியும் எனக்கு கிடைத்தது.அதுவே எனது மகனுடன் நான் இறுதியாக தொடர்புகொண்ட தருணம்.
8
நான் உடனடியாக காந்தி சிலையை (FORT ROAD  AND DOCK YARD) நோக்கி சென்றேன்,மாணவர்கள் இந்த இடத்தில் வழமையாக சந்திப்பது எனக்கு தெரியும்.துறைமுக வீதிக்கு அருகிலேயே மாணவர் சங்கம் அமைந்திருந்ததே இதற்கு காரணம்.இந்த இடம் எனது வீட்டிலிருந்து 350 மீற்றர் தூரத்திலேயே இருந்தது.நான் செஞ்சிலுவை சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்கூட்டரிலேயே அந்த பகுதிக்கு சென்றேன் அது நான் ஒரு மருத்துவர் என்பதை அங்குள்ளவர்களிற்கு தெரிவிக்கும்.எனினும் என்னை மெமேரியல் மண்டபத்திற்கு அருகில் உள்ள கடற்படை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தினர்கள் அந்த சோதனை சாவடியில் கொமாண்டோக்களின் சீருடை அணிந்த மூன்று இராணுவத்தினர் காணப்பட்டனர்.இந்த சோதனை சாவடியில் காணப்பட்ட ஒரு இராணுவவீரர்; எனது ஸ்கூட்டரில் காணப்பட்ட செஞ்சிலுவை அடையாளத்தை பார்த்து நான் ஒரு மருத்துவர் என்பதை அறிந்து கொண்டார், “மருத்துவரா”? என கேட்டார் .நான் “ ஆம்” என்றேன், எனது பெயரை தெரிவித்து எனது தேசிய அடையாள அட்டையை காண்பித்தேன். “சோதனைசாவடி ஊடாக செல்லவேண்டும்” என நான் தெரிவித்தேன். “டொக்டர் ஏன் நீங்கள் இதன் ஊடாக செல்ல விரும்புகின்றீர்கள”?; என அங்கிருந்த இராணுவவீரர் கேள்வி எழுப்பினார். நான் “எனது மகன் இன்னமும் வீடு திரும்பவில்லை அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை அவரை தேடிப்போகின்றேன் “ என தெரிவித்தேன்.என்னால் எவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது நீங்கள் வேண்டுமென்றால் நடந்து போகலாம் என அந்த இராணுவீரர் சிங்களத்தில் தெரிவித்தார்.
9
குண்டுவெடித்ததை கருத்தில் கொள்ளும் போது அந்த சோதனை சாவடியில் காணப்பட்ட இராணுவவீரர்கள் எச்சரிக்கை நிலையில் இருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.அவர்களின் நடவடிக்கைகள் சாதாரணமாகவும் நிதானமாகவும் இருந்தது. அவர்கள் மொபைலில் உரையாடிக்கொண்டிருந்தார்கள், ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்,அவர்களின் துப்பாக்கிகள் தற்பாதுகாப்பு நிலையில் இல்லாமல் தோளில் தொங்கவிடப்பட்டிருந்தன.மாலை இருட்டு என்பதால் என்னால் அந்த நேரத்தில்என்னால் அசாதாரணமான எதனையும் பார்க்க முடியவில்லை. அசாதாரணமான எதுவும் கேட்கவில்லை.அந்த நேரத்தில் அங்கு பொதுமக்கள் எவரையும் நான் பார்க்கவில்லை.என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கா வேறு யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்க முடியாத நிலை காணப்பட்டது.

10- நான் ஸ்கூட்டரை வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டு உடனடியாக மீண்டும் அந்த பகுதிக்கு சென்றேன்.ரஜிகரின் கையடக்க தொலைபேசியிலிருந்து எந்த அழைப்பும் வராததால் நான் கவலையடைந்தேன்.காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.எனது வீட்டிலும் ஏனைய பகுதிகளிலும் மின்சாரம் இருந்ததால் அங்கு மின்சார துண்டிப்பு இல்லை என்பது எனக்கு தெரியும்.என்னால் பொதுமக்களை பார்க்கமுடியவில்லை படையினர் வாகனங்களில் நடமாடுவதை மாத்திரம் நான் பார்த்தேன்.ஒரு வானையும் மூன்று முச்சக்கரவண்டிகளையும் நான் பார்த்தேன்.ஆனால் எவ்வகையான வாகனங்கள் எந்தவகையான இராணுவவாகனங்கள் என்பதை பார்த்து உறுதி செய்யும் நிலை இருக்கவில்லை.துறைமுக பகுதியிலிருந்து ஜீப்பொன்று வருவதை நான் பார்த்தேன்.அது லான்ட்ரோவர் போல காணப்பட்டது,அது திறந்திருந்ததா மூடியிருந்ததா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை,அதில் ஹெட்லைட்கள் காணப்படடவில்லை பார்க்கிங் லைட் மாத்திரம் காணப்பட்டது.மிகவும் இருட்டாகயிருந்ததால் ஜீப்பில் ஆட்கள் இருக்கின்றனரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.துறைமுக வீதியிலிருந்து வந்த ஜீப் யுடேர்ன் எடுத்து காந்தி சிலையின் முன் நின்றது.அந்த ஜீப் நின்றதும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என ஆண்குரல்கள் அலறுவதை என்னால் கேட்க முடிந்தது.சற்று முதிர்ச்சியடைந்த ஆண் குரல் ஒன்றையும் நான் கேட்டேன் அது ஏனையவர்களின் குரலை விட உரத்து ஓலித்தது ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை


 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்