ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டமாக, மேலும் 250 அரச நிறுவனங்களில் உள்ளக விவகார பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்தில் இருந்தாலும், 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதுடன், இது ஏனைய துறைகளில் தரவரிசையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
கடந்த மக்கள் எழுச்சியின் முக்கிய கோசம் ஊழல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து, அதன் பாதகமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வரும் நேரத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதாகவும், மக்கள் எழுச்சி ஒரு முறையான செயல்முறையின் இறுதி விளைவாகும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
மக்களின் எழுச்சியை அற்பமானதாக கருத முடியாது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அரச ஊழியர்களாக, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே, மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காகத்தான் நாம் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவியுள்ளோம்.
அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது அவர்களின் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரச துறையில் ஊழல் கலாசாரத்தை மாற்ற முடியும். அரச சேவைக்குள் நேர்மையான கலாசாரத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையாகவும், அரச அதிகாரிகளின் நேர்மையை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு தளமாகவும் உள்ளக விவகாரப் பிரிவுகளைக் கருதலாம்” என்றும் தெரிவித்தார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை