இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் அறிவிப்பும் பின்னணியும்

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் அறிவிப்பும் பின்னணியும்
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பை அடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடினார். இந்த தொலைபேசி உரையாடலை முதலில் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், ‘‘நான் பலமுறை கூறியது போல, அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியை உண்மையாகவே ஒரு சிறந்த நண்பராகக் கருதுகிறார்! வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியை இன்று மாலை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன’’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர். வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர். வர்த்தகம், ரஷ்யா – உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த நகர்வு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்.

500 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும்” என ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப் உடனான தொலைபேசிய உரையாடல் தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில், “இன்று எனது அன்பு நண்பர் அதிபர் ட்ரம்புடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அற்புதமான அறிவிப்புக்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக அதிபர் டிரம்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, ​​அது நமது மக்களுக்குப் பயனளிக்கும். பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை இது திறக்கிறது. அதிபர் ட்ரம்ப்பின் தலைத்துவம், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது. இந்த கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரங்களுக்கு கொண்டு செல்ல அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

HINDU
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்