இலங்கைக்கு பயணம்மேற்கொள்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்-பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் மின்னணு பயண அனுமதி (ETA) தொடர்பான அறிவிப்புச் செய்திகளை (Approval Notices) மின்னஞ்சல் மூலம் அனுப்புவதில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் தூதரகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைச் சரிசெய்ய இலங்கை அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • அனுமதிப் பத்திரம் இன்றி பயணம் செய்யலாம்: ஏற்கனவே ETA-விற்கு விண்ணப்பித்த பயணிகள், அதற்கான உறுதிப்படுத்தல் அறிவிப்பு (Approval Notice) இன்னும் கிடைக்கப் பெறாவிட்டாலும் இலங்கைக்கான தமது பயணத்தைத் தொடர முடியும்.

  • விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு: ETA அனுமதிப் பத்திரத்தை சமர்ப்பிக்காவிட்டாலும் பயணிகளை விமானத்தில் ஏற்ற அனுமதிக்குமாறு (Boarding) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதிகள்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அங்குள்ள குடிவரவு அதிகாரிகளினால் ETA சரிபார்ப்பு மற்றும் தேவையான ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த சேவையை மிக விரைவில் வழமைக்குக் கொண்டுவர உழைப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்