ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் ஈடுபட்டால், அவை ஈரானின் நியாயமான இலக்குகளாக மாறும் என்று ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
“ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எந்த நாடு இணைந்தாலும், அவை ஈரானின் பதிலடித் தாக்குதலுக்கான நியாயமான இலக்குகளாக இருக்கும்” என்று வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி (Majid Takht-Ravanchi) பிரான்ஸ் 24 ஊடகத்திடம் தெரிவித்தார்.