ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய ஜனாதிபதிமசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக புடினின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலின் போது, ஈரானின் உச்ச தலைவர், பிற அரசு அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆகியோரின் மறைவுக்கு புடின் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதாக கிரெம்ளின் (Kremlin) கூறியுள்ளது.
மேலும், மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஒரு இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டை புடின் மீண்டும் வலியுறுத்தியதாக அவரது அலுவலகம் மேலும் சேர்த்துள்ளது.
மறுபுறம், ரஷ்யாவின் ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பெசெஷ்கியன், ஈரானின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவான அறிக்கையை வழங்கினார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.