கொழும்பு தாமரை கோபுர மேலாண்மை நிறுவனம் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து வருவாய் 31 வீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியது.
செய்தியாளர் சந்திப்பில் தாமரை கோபுர மேலாண்மை நிறுவனதலைவர் ஷிரந்த பெரிஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சாமரு டி அல்விஸ் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.நாங்கள் நிர்வாகத்தை சரியாக ஒரு வருடம் முன்பு பொறுப்பேற்றதிலிருந்து புதிய நிர்வாகத்தின் கீழ் கொழும்பு தாமரை கோபுர மேலாண்மை நிறுவனம் குறிப்பிடத்தக்க நிதி முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது” என்று சிராந்த பீரிஸ்ஷிராந்த பெரிஸ் செவ்வாயன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில்
தெரிவித்தார்
“ஆகஸ்ட் 2025 இல் முடிவடைந்த காலகட்டத்தில் வருவாய் ரூ. 1.43 பில்லியனை எட்டியது இது 2024 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 31 வீதம்அதிகமாகும். மொத்த லாபம் 77 வீதம்அதிகரித்து ரூ. 786.86 மில்லியனாக உயர்ந்துள்ளது லாப வரம்புகள் 42வீதத்திலிருந்து 55வீதம் ஆக மேம்பட்டுள்ளன. என அவர் குறிப்பிட்டார்.
