:
, பிபிசி செய்திகள்
அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஐரோப்பாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய விமான நிலையங்களுக்கான வர்த்தக அமைப்பு (ACI Europe) எச்சரித்துள்ளது.
இது குறித்து எரிசக்தி மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஐரோப்பிய ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ACI Europe, விமான எரிபொருள் கிடைப்பதில் நிலவும் “அதிகரித்து வரும் கவலைகள்” குறித்து தனது உறுப்பினர்களை எச்சரித்துள்ளது.
“எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் நெருக்கடியானது விமான நிலையச் செயல்பாடுகள் மற்றும் விமான இணைப்புகளை கடுமையாகப் பாதிக்கும். இது ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது,” என்று அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஹார்முஸ் ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து சீராகவும் நிலையானதாகவும் அமையாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையான விமான எரிபொருள் தட்டுப்பாடு என்பது நிஜமாகிவிடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் விமான எரிபொருள் இறக்குமதியில் சுமார் 50% வளைகுடா நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக ஏற்கனவே பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளைக் குறைத்துள்ளதுடன், பயணக் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளன.
கடந்த வாரம், ஐரோப்பிய விமான எரிபொருள் விலை ஒரு மெட்ரிக் தொன் 1,838 டொலர் என்ற வரலாறுகாணாத உச்சத்தை எட்டியது. போர் தொடங்குவதற்கு முன்னதாக இதன் விலை 831 டொலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.