CNN
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் விமான நிலையத்தை வந்தடைந்த ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர், தமது தூதுக்குழு நம்பிக்கையுடன் வந்திருப்பதாகவும், ஆனால் அமெரிக்கத் தரப்பைத் தாம் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் நல்லெண்ணம் உள்ளது, ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை,” என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.
அமெரிக்கா ஒரு “உண்மையான உடன்படிக்கைக்குத் தயாராக இருந்தால்”, ஈரானும் அவ்வாறே இருக்க முடியும் என்று காலிபாப் கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எமது அனுபவங்கள் எப்போதும் தோல்வியிலும், வாக்குறுதி மீறல்களிலுமே முடிந்துள்ளன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
.