புலம்பெயர்ந்தவர்கள் எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு விரும்புகின்றார்கள். ஆனால் இங்குள்ள சிலர் அவர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மோசடி செய்கின்றனர். -வடக்கு மாகாண ஆளுநர்

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான மூலத்திட்டம் (Master plan) வடக்கு மாகாண பொறியியலாளர் சங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபையால் படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்திரநிலா மணிமண்டபம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வியாழக்கிழமை காலை (09.10.2025) திறந்து வைக்கப்பட்டது.
இங்கு ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் 2017ஆம் ஆண்டுதான் இந்தக் கல்லுண்டாய் குடியேற்றக் கிராமம் உருவாக்கப்பட்டது. இந்தக் கிராமத்துக்கு மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமைப்படுத்திக் கொடுக்கப்படவேண்டியுள்ளன. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் உங்களுக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதைப்போல நீங்கள்தான் உங்கள் கிராமத்தை, வீட்டை முன்னேற்றுவதற்கு உழைக்கவேண்டும். உங்களின் அக்கறையிலும் அர்ப்பணிப்பிலும்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது.
இந்த மணிமண்டபத்தை நிறுவுவதில் பல இடர்களை எதிர்கொண்டமை எனக்குத் தெரியும். ஆனாலும், மிகச் சிறப்பாக இதை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இங்குள்ள மக்கள்தான் இதனை மிக அழகாக அப்படியே பாதுகாத்து பயன்படுத்தவேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு விரும்புகின்றார்கள். ஆனால் இங்குள்ள சிலர் அவர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மோசடி செய்கின்றனர். அதனால் புலம்பெயர்ந்தவர்கள் உதவி செய்வதற்கு பின்னடிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் ஊடாகவும் அவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல் நடப்பதன் ஊடாகவுமே வெற்றிகரமாக திட்டங்களைச் செயற்படுத்தலாம்.
இந்தக் கிராமம் மேலும் வளர்ச்சியடையவேண்டும். அதற்கு மாகாணசபை ஊடாக வழங்கக் கூடிய உதவிகளை வழங்குவேன், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச செயலர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு