ஓய்வூதியக் காலத்தில் தங்களது பெற்றோர் மற்றும் அன்பிற்குரியவர்களை ஆதரிப்பதற்கான நடைமுறை வழிகளை குடும்பங்கள் தேடி வரும் நிலையில், தங்கள் வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்த தந்தையாருக்கு நீடித்த மதிப்புமிக்க ‘நிதிப் பாதுகாப்பு மற்றும் மன அமைதியை’ பரிசாக வழங்குவது குறித்து சிந்திக்குமாறு ரிச்சர்ட் பீரிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் (Richard Pieris Finance Limited) நிறுவனம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.
ஓய்வூதியக் காலத்தில் நிதி ஸ்திரத்தன்மையும் முறையான வருமானமும் மிகவும் அவசியமாக இருக்கும் இவ்வேளையில், ரிச்சர்ட் பீரிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ‘முதியோர்களுக்கான நிலையான வைப்புத் திட்டம்’ (Senior Citizen Fixed Deposit scheme) நம்பகமான மாதாந்திர வருமானம் மற்றும் நிறுவனப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் பெற்றோரின் நீண்டகால நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கான நல்வாய்ப்பை குடும்பங்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டமானது கவர்ச்சிகரமான வட்டி வருவாயை மட்டுமன்றி, முதியவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நீடித்த நம்பிக்கை, மன அமைதி மற்றும் நிதிச் சுதந்திரத்தையும் வழங்குகின்றது.
முதியோர்களுக்கான இந்த நிலையான வைப்புத் திட்டமானது, முதியவர்கள் தங்களது சேமிப்பைப் பாதுகாக்கும் அதேவேளையில், தினசரிச் செலவுகளைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே கணிக்கக்கூடிய மாதாந்திர வருமானத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தெரிவுகளில், இந்நிறுவனத்தின் 25 மாத கால நிலையான வைப்புத் திட்டமானது 13 சதவீத மாதாந்திர வட்டி வீதத்தை வழங்குகிறது. இது 13.80 சதவீத வருடாந்திர நிகர வருவாய்க்கு (Annual equivalent return) நிகரானது என்பதுடன், தற்போது முதியோர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகக் கவர்ச்சிகரமான மாதாந்திர வருமானத் தெரிவுகளில் ஒன்றாகவும் அமைகிறது.
இந்தத் திட்டம் ரிச்சர்ட் பீரிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வலுவான நிதி அடிப்படைகள் மற்றும் ஆளுமைப் கட்டமைப்பின் பின்னணியைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ‘Fitch Ratings’ அமைப்பினால் ஸ்திரமான கணிப்புடன் (Stable Outlook) ‘A(lka)’ தரமதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன், இது நிறுவனத்தின் விவேகமான இடர் மேலாண்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற நிதி நிறுவனம் என்பதால், தகுதிவாய்ந்த வைப்புத்தொகைகள் ‘இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின்’ (Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme) கீழ் உள்ளடக்கப்பட்டு, வைப்பாளர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்தத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த முதன்மை நிறைவேற்று அதிகாரி (CEO) லோஹிக பொன்சேகா, பெற்றோர் தங்கள் வாழ்நாளில் செய்த தியாகங்களையும், நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள தீர்வுகள் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தந்தையர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
“பல தந்தையர்கள் தங்களது குடும்பங்களைத் திட்டமிடுவதற்கும் வழிநடத்துவதற்கும் பல தசாப்தங்களைச் செலவிடுகிறார்கள். அவர்கள் ஓய்வுபெறும் போது, அவர்களுக்குப் பாதுகாப்பான வருமான வழிகளும் நிதி நம்பிக்கையும் கிடைப்பதை உறுதி செய்வதும் சம அளவில் முக்கியமானது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டே எங்களது முதியோர்களுக்கான நிலையான வைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவன பலத்துடன் கூடிய நம்பகமான மாதாந்திர வருமானத்தை வழங்குகிறது” என்று அவர் கூறினார்.
தனது விரிவான கிளை நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம், ரிச்சர்ட் பீரிஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவு, எளிமையான செயல்முறைகள் மற்றும் தீவு தழுவிய சேவைகளின் ஊடாக நிதித் தீர்வுகளை மக்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது.
இந்தத் தந்தையர் தினத்தில், நிதி நல்வாழ்வு குறித்த கலந்துரையாடல்களை ஊக்குவிக்க இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், சில நேரங்களில் மிக அர்த்தமுள்ள பரிசு என்பது இன்றைய நாளுக்காகக் கொடுக்கப்படுவது அல்ல, மாறாக அது நாளைய தினத்திற்காக உருவாக்கும் பாதுகாப்பேயாகும். ரிச்சர்ட் பீரிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் என்பது மத்திய வங்கியின் உரிமம் பெற்ற ஒரு நிறுவனமாகும். மேலும், இது சில்லறை வர்த்தகம், உற்பத்தி, தோட்டங்கள், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் பரந்து விரிந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் (Richard Pieris Group) ஒரு பெருமைமிகு அங்கமாகும். இக்குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவில் ஆர்பிகோ இன்சூரன்ஸ் லிமிடெட் (Arpico Insurance Limited) மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை உள்ளடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
