இந்தியாவும் அமெரிக்காவும் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்கா இந்தியா ரஸ்யாவிலிருந்து எண்ணையை இறக்குமதி செய்வதை 50 வீதத்தினால் குறைக்கதொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ரஷ்யாவிடமிருந்து எண்ணையை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இணங்கியுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணையை கொள்வனவு செய்வதை நிறுத்தும் என மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவால் இதனை உடனடியாக செய்ய முடியாது என தெரிவித்துள்ள அவர் சில நடைமுறைகள் உள்ளன ஆனால் இவை விரைவில் முடிவிற்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி சீனாவும் இதனை செய்வதை நான் உறுதிப்படுத்தவேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா ரஷ்யாவிற்கு பொருளாதார அழுத்தங்களை கொடுக்க முயல்கின்றது.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரியொருவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
