கம்பனிகள் (நிறுவனங்கள்) மற்றும் சங்கங்களை(companies and societies.) பதிவு செய்வதற்கான கட்டணங்களை அதிகரித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றைப் (Private Limited Company) பதிவு செய்வதற்கான கட்டணம் 5,200 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமொன்றின் (Public Limited Company) பதிவுக்கட்டணம் 26,400 ரூபாவாகவும், வரையறையற்ற நிறுவனமொன்றின் (Unlimited Company) பதிவுக்கட்டணம் 19,800 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, நிறுவனப் பெயர் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக திருத்தப்பட்ட கட்டணம் 2,600 ரூபாவாகும்.
சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் 3,900 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதுடன், சங்கமொன்றின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான கட்டணம் 1,900 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.
