மத்திய கிழக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரியாத் மற்றும் டுபாய் விமான சேவைகளை இடைநிறுத்தியது எயார் பிரான்ஸ்

மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதன் காரணமாக, ரியாத்  மற்றும் டுபாய்க்கான தனது விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எயார் பிரான்ஸ் (Air France) நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ரியாக் நகரிற்கான மற்றும் அங்கிருந்தான விமான சேவைகளை ஜூலை 25 வரையிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரிற்கான மற்றும் அங்கிருந்தான சேவைகளை ஜூலை 28 வரையிலும் இடைநிறுத்துவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பெய்ரூட்டுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை ஓகஸ்ட் 2 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலை “வேகமாக உருவெடுத்து வரும்” நிலையில், அது குறித்தான மீளாய்வின் அடிப்படையில் மட்டுமே விமான சேவைகள் மீண்டும் தொடங்குவது தீர்மானிக்கப்படும் என எயார் பிரான்ஸ் கூறியுள்ளது. “வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தமது முதன்மை முன்னுரிமை என்பதை எயார் பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறது” என்றும் அது மேலும் சேர்த்துக் கொண்டது.

ஈரானுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அப்பகுதிக்கு மேலும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைப்பதாக அறிவித்த பின்னணியிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க போருக்கு மத்தியில், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கான தமது விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE

மத்திய கிழக்கு விமானச் சேவைகள்: சர்வதேச விமான நிறுவனங்களின் தற்போதைய நிலைவரம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து