ரீசஸ் எனர்ஜி பிஎல்சி (Resus Energy PLC) நிறுவனம், அம்பாறை மாவட்டத்தின் தமண பகுதியில் அமைந்துள்ள புதிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக இயங்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரீசஸ் எனர்ஜி பிஎல்சி நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான ‘ரீசஸ் ஈஸ்டர்ன் சோலார் (தனியார்) நிறுவனம்’ (Resus Eastern Solar (Pvt) Limited) மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 3.5 ஜிஹெச் (GWh) தூய்மையான மின்சாரம் உற்பத்திய செய்யப்பட்டு நாட்டின் தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு (National Grid) வழங்கப்படவுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த வசதியானது குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேலும் வலுப்படுத்துவதோடு, நிலையான ஆற்றலை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கும் உறுதுணையாக அமைகிறது
