கல்வி, தரமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப சார்ந்த உள்ளடக்கங்களை (family-oriented content) மையமாகக் கொண்டு இயங்கும் ‘அஹச டிவி’ (Ahasa TV) எனும் புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் தொடக்க விழாவில், பிஎம்ஐ குரூப் (BMI Group) தலைவர் நிலங்க கருணாரத்ன அலைவரிசையின் தலைமைக் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, நிலங்க கருணாரத்ன (தலைவர் – ஏவிஜி குரூப்), அஜித் ரணசிங்க (முதன்மை நிர்வாக அதிகாரி – CEO), பொறியாளர் நிலுப்ப ரணவீர (முதன்மை செயல்பாட்டு அதிகாரி – COO), கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார (முதன்மை உள்ளடக்க அதிகாரி மற்றும் அலைவரிசைத் தலைவர் – CCO), கிஷோர் விதானாச்சி (முதன்மை வருவாய் அதிகாரி – CRO), உபேந்திர ஹேரத் (முதன்மை செய்தி அதிகாரி மற்றும் செய்தி/தற்போதைய விவகாரங்களின் தலைவர் – CNO) மற்றும் விராஜ் மாலிங்க கமகே (நிகழ்ச்சிகளின் தலைவர்) ஆகியோர் கலந்துகொண்டனர்

