அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை

அனோஜனிற்கு விதிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டில் இரண்டே மாதங்களுக்குள் மரணதண்டனையாக மாற்றப்பட்டுள்ளமை  சவுதிஅரேபியாவின் நீதித்துறையின் தன்னிச்சையான செயற்பாடு குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஹெபாமொராயெப் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்திற்காகஇலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை  சவுதி அரேபியா உடனடியாக இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அனோஜனிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரது கருத்து சுதந்திர உரிமையை பயன்படுத்தியதன் அடிப்படையில் மாத்திரம் உருவானவை  என்பதால் சவுதிஅரேபிய அதிகாரிகள் அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யவேண்டும்.
அனோஜனிற்கு விதிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டில் இரண்டே மாதங்களுக்குள் மரணதண்டனையாக மாற்றப்பட்டுள்ளமை  சவுதிஅரேபியாவின் நீதித்துறையின் தன்னிச்சையான செயற்பாட்டினையும்,மரண தண்டனை விதிக்கப்படும் விதம் குறித்த பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள் மத நிந்தனையாக கருதப்பட்டாலும் கூட கருத்துசுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக எவரும் சிறையில் அடைக்கப்படவோ அல்லது மரணதண்டனை விதிக்கப்படவோ கூடாது.
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்.
வலைத்தள பதிவிற்காக ஒருவருக்கு மரணதண்டனையை விதிப்பதற்கு சவுதி அரேபிய அதிகாரிகள் தயாராகயிருப்பது ஒருபோதும் குற்றமாக்கப்படாத செயல்களுக்கு கூட சவுதி அரேபிய அதிகாரிகள் இத்தகைய கொடுரமான தண்டனையை வழங்க தயாராகயிருப்பதை காண்பிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்