LAW AND SOCIETY TRUST

முன்மொழியப்பட்ட அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலத்தின் படி பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும் எந்த செயலும் பயங்கரவாதமாக கருதப்படுகின்றது.
மரணத்தை ஏற்படுத்துதல்
பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்
சுற்றுச்சூழலிற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்துதல்.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்துதல்
கணிணி அமைப்புகளுக்கு சேதத்தை பாதிப்பை ஏற்படுத்துதல்
தொட்டுணரக் கலாச்சார பாரம்பரிய சொத்துக்களை அழித்தல்
மேற்குறிப்பிடப்பட்ட செயல்கள் தெரிந்தே அல்லது சட்டவிரோதமாக பின்வரும் நோக்கங்களுக்காக செய்யப்படு;ம்போது அவை பயங்கரவாதமாக கருதப்படும்

1
அரசியல் அல்லது கருத்தியல் நோக்கமொன்றை முன்னெடுப்பதற்காக பொதுமக்களிடையே பீதி அல்லது அச்ச சூழ்நிலையை உருவாக்குதல்
2
ஒரு அரசாங்கத்தை அல்லது அமைப்பை ஏதேனும் ஒரு செயலை செய்யவேண்டாம் அல்லது செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தல் பலப்பிரயோகத்தில் ஈடுபடுதல் அழுத்தத்தை கொடுத்தல்
இ;ந்த வரைவிலணக்கம் மிகவும் பரந்தது.

ஒரு குறிப்பிட்ட செயலினால் மேலே குறிப்பிடப்பட்ட வகையான மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என பொலிஸ் அதிகாரி கருதினால் அதனை அவர் ஒரு பயங்கரவாத செயலாக கருதி நடவடிக்கை எடுக்க முடியும்.
இதன் அர்த்தம் என்ன?
முந்தைய படத்தில் குறிப்பிடப்பட்ட பயங்கரவாதத்திற்கான வரையறைகள் மிகவும் பரந்தாகயிருப்பதால் ஒரு பொலிஸ் அதிகாரி தனது சொந்தக்கணிப்பின் அடிப்படையில் ஒரு செயலை பயங்கரவாதம் என தீர்மானித்து கைதுசெய்யவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இந்த சட்டம் அதிகாரம் அளிக்கின்றது.