இலங்கை அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கொடூரமான சட்டம்”- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டம் அரசியலமைப்பில் மனித உரிமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் முரணாக உள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


வர்த்தமானியில் ஒக்டோபர் ஆறாம் 2026 வெளியான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் என்ற சட்டமூலம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டவாக்கத்தின் அவசியத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது எனினும் அத்தகைய சட்டமூலம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைளுக்கும் உடன்படுவதாக காணப்படவேண்டும்.
எனினும் வர்த்தமானியில் வெளியான சட்டமூலத்தில் காணப்படும் விடயங்கள் இலங்கை அரசியலமைப்பில் மனித உரிமைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளுக்கும் முரணாணதாக காணப்படுகின்றது.
மேலும் இது 1979 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கடுமையானதாகயிருக்ககூடும்.
உதவிபொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு குறையாத பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை ஒரு நபருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சட்டமூலம் வழிவகுக்கின்றது.இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 வது பிரிவை அப்படியே பிரதிபலிக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16வது பிரிவு குறித்து கடந்தகாலங்களில் எங்கள் கரிசனைகளை வெளியிட்டுள்ளோம்.பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை சாட்சியமாக ஏற்பதானது காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை சித்திரவதை செய்வதற்கும் துன்புறுத்துவதற்கும் வழிவகுக்கும்.
ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினரா என்பதை தீர்மானிப்பதற்கு இந்த சட்டமூலமானது மிகவும் பரந்த அடிப்படையிலான வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றது.
அறியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கைச்செய்கைகள், மொழி அல்லது பச்சை குத்தல்கள்,ஆகியவற்றை பின்பற்றுவது அல்லது அவற்றை பின்பற்றும் உறுப்பினருடன் வெறுமனே தொடர்புகளை கொண்டிருப்பது போன்றவை இந்த வரையறைகளில் உள்ளடங்குகின்றன.
இந்த சட்டமூலமானது நியாயமற்ற முறையில் பலரையும் சந்தேகநபர்கள் வலைக்குள் கொண்டுவரும் ஆபத்தை கொண்டுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Douglas-Devananda-682x375-1
டக்ளஸ்தேவானந்தாவே ஆசாத்மௌலானவை பிள்ளையானிற்கு அறிமுகப்படுத்தினார் – நீதிமன்றில் பிரதிசொலிசிட்டர் ஜெனரல்
856462064_2307616259779678_1274027215756073571_n
 தாயகம் திரும்புவோர் அமைப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை
heidi
யூதகுடியேற்றவாசிகளின் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க ஊடகவியலாளர் – பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள்
sara
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்
easter bomb
உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்
PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
Shanakiyan-Rasamanickam
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------