டக்ளஸ்தேவானந்தாவே ஆசாத்மௌலானவை பிள்ளையானிற்கு அறிமுகப்படுத்தினார் – நீதிமன்றில் பிரதிசொலிசிட்டர் ஜெனரல்

நிருபர்

கொழும்பு ஒக்டோபர் 23

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே ஆசாத்மௌலானவை கருணாஅம்மான் பிள்ளையானிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதிசொலிசிட்டர் ஜெனரல் திலீபபீரிஸ் டக்ளஸ் தேவானந்தா நடத்திய செய்தியாளர் மாநாடு குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் இடம்பெற்றவேளை இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாதாவது

கருணா அம்மானிற்கும் பிள்ளையானிற்கும் ஆசாத்மௌலானாவை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் இயக்குநராக பின்னர் பணிபுரிந்த சங்கர் என்பவரிடம் ஆசாத்மௌலானா கருணா அம்மான் பிள்ளையான் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் டக்ளஸ் தேவானந்தா இதனை மறுத்தார்.
நாங்கள் அவருடைய வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் அவர் செய்தியாளர்மாநாடு ஒன்றினை நடத்தி விசாரணையாளர்களுக்கு தெரிவித்த விடயஙகளை குறிப்பிட்டுள்ளார். அவர் இதனை செய்யக்கூடாது.அவர் சட்டங்களுக்கு உட்பட்டவர் கட்டுப்படவேண்டியவர்.
அதன் பின்னர் நாங்கள் சங்கர் என்பவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தோம்.அவர் தெரிவித்த விடயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த நபர் கடந்தகாலத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பிரிவின் தலைவராக செயற்பட்டுள்ளார்.டக்ளஸ் தேவானந்தாவே கருணா பிள்ளையான் ஆசாத் மௌலானா சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு தன்னை பணித்தார் என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் இவர் தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சிலர் ஆசாத்மௌலானா கோட்டாபய ராஜபக்ச சுரேஸ்சாலே தொடர்பில் பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றார் என குறிப்பிடுகின்றனர்,ஆனால் அவர் பொய்யான தகவல்களை வழங்கவேண்டிய தேவையில்லை, என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Mahinda-Rajapaksa
மீண்டும் அரசியலில் ஈடுபடும்போது எவரையும் பழிவாங்கவேண்டாம் - - விளக்கமறியலில் உள்ள நாமலிற்கு மகிந்த கடிதம்
bimal
செம்மணி மனித புதைகுழி- எந்தவொரு தனிநபரும் இறுதி முடிவினை முன்வைக்க முடியாது – வெளிநாட்டுஅமைப்புகள் உள்நாட்டு பொறிமுறையை சிதைப்பதற்கு அனுமதிக்ககூடாது- அமைச்சர் பிமல்
Mujibur-Rahman-L
ஈரானிய கப்பல்களில் உள்ளவர்களுக்கு குடிப்பதற்கான நீரை கூட வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது – முஜிபூர்
Police-1
வஸ்கவிய எனப்படும் சாபக்கவிதைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டமைக்காக எவரையும் விசாரணை செய்யவில்லை – பொலிஸ் ஊடகப்பிரிவு
Raj-Somadeva
தொற்றுநோய் மரணங்களா அல்லது சாட்சியங்களை அழிக்கும் முயற்சியா? பேராசிரியர் சோமதேவாவின் செம்மணி அறிக்கையை நிராகரிக்க வேண்டிய 5 காரணங்கள்
fe4ab0b7-b072-4987-8290-5662176a30b2
இலங்கையில் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ள ஜனாதிபதியை இலக்குவைத்து இயற்றப்பட்ட வஸ்கவிய ( சாபக்கவிதைகள்)
ukra war
ரஸ்ய உக்ரைன் மோதல்- கொல்லப்பட்ட இலங்கையரின் சடலத்தை ரஸ்யாவிடம் கையளித்தனர் உக்ரைன் அதிகாரிகள்
arrest-monk-protest
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் கத்தியுடன் நபர்
16930815621492431198
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை
kasap
ஜனாதிபதி ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் அல்லது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் - கஸ்ஸப்ப தேரர்