ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை: உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை – கொழும்பு மேல் நீதிமன்றம்

சிறைச்சாலை அதிகாரிகளால் களையப்பட்ட போது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை மீண்டும் அணிவிப்பது தொடர்பில் உத்தரவு பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று (23) தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மார்க்கம் மற்றும் திருக்குர்ஆன் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகத் தெரிவித்து, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி இதனைச் சுட்டிக்காட்டினார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக வீரசூரிய பின்வருமாறு சமர்ப்பணங்களை முன்வைத்தார்:

சிறைச்சாலை விதிமுறைகளை மீறாமல் பௌத்த பாரம்பரியத்திற்கு அமைவாக மீண்டும் ஞானசார தேரர் காவியுடையை அணிவதற்கு அனுமதிக்குமாறு கோட்டை மகாநாயக்க தேரர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.ஆனால் சிறைச்சாலைகள் அதிகாரிகள் அதற்கு பதிலளிக்கவில்லை.
நான் பௌத்தன் இல்லாதபோதிலும் இது பௌத்தமத நடைமுறைகளின் அடிப்படையில் இது ஒரு நியாயமான கோரிக்கையாகும் ஞானசாரதேரர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியல்ல என அவர் தெரிவித்திருந்தார்.
இதன்போது பதிலளித்த நீதிபதி அசாதாரண சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவரை மின்னணுமுறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள் என குறிப்பிட்டார்.
எனினும் தேவையான உபகரணங்களை பெற முடியாததால் ஞானசாரதேரர் வட்ஸ்அப்மூலமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்என நீதிபதி தெரிவித்தார்.
காவி உடையை மீண்டும் அணிய அனுமதிப்பது தொடர்பில் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்க முடியாது,இக்கோரிக்கைய ஏற்றுக்கொண்டால் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்தமதகுருமார் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதி தெரிவித்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை அனுபவித்துவரும் பௌத்தமதகுருமார் உள்ளனர் அப்படியானால் நீதிமன்ற நடவடிக்கைக்காக அவர்களை ஆஜர்படுத்த முன்னர் அவர்களுக்கு பௌத்தமதகுருமார் காவியுடையை அணிவிக்கவேண்டு;ம் என அர்த்தமா?என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Hansaka
ஈரானிய கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவசிகிச்சை -சர்வதேச கடல்சார் சட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டோம் என்கின்றார் பிரதியமைச்சர்
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் -27 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மருத்துவமனையில்
16930815621492431198
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமாரை வெளியேற்ற பொலிஸார் மீண்டும் நீதிமன்றத்தில் மனு
chemmani145
ராஜ்சோமதேவவின் அறிக்கை சட்டவிரோத படுகொலைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பலாம் - பிரித்தானிய தமிழர் பேரவை
Raj-Somadeva
பேராசிரியர் ராஜ்சோமதேவ மனச்சாட்சிப்படி நடக்கவில்லை பணத்திற்காக அல்லது தனது இனத்தை காப்பாற்ற செயற்படுகின்றார்- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்
861364491_1137554672549164_5587214152717481222_n
செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்! கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை...!
gajendran
திலீபன் சிலை விவகாரம் - வாக்குமூலம் பெறுவதற்காக கஜேந்திரனுக்கு குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பாணை
batti mayi
மயிலத்தமடு விவகாரம் - ஜனாதிபதியை அவசரமாக சந்திப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம்
batti land
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரை மீட்பிற்கான கலந்துரையாடல்
gna12
சிறைவாசம் அனுபவிக்கும் மததலைவர்கள் மத ஆடைகளை அணிய அனுபவிக்கும் புதிய விதிகள் - வர்த்தமானியில் வெளியிட்டது அரசாங்கம்