பாராளுமன்றத்தில் ‘வஸ்கவி’ ( சாபக்கவிதைகளை) பாடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ‘வஸ்கவி’ பாடலை எழுதியவர்களையும் பாடியவர்களையும் கைது செய்வதற்குச் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
“தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் ‘வஸ்கவி’ பாடல்களுக்குப் பயப்படுகிறது” எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலேயே அந்த வஸ்கவி பாடலைப் பாடத் தொடங்கினார்.
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை பாராளுமன்றத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.